காலை வணக்கம். நேற்றைய பொழுதில் எனது நண்பர் பாலாஜி திருமலை ராஜிடம் இருந்து ஒரு தொலை பேசி அழைப்பு வந்தது அவரிடம் பேசுகையில் அவர் செய்த நல்ல காரியம் தெரிய வந்தது. அதை உங்களிம் பகிர்ந்து கொள்ளலாம் என்று நினைக்கிறேன். எங்கள் அலுவலக டிரைவர் ஒருவரின் அறுவை சிகிட்சைக்காக உதவி புரியுமாறு அலுவலக மெயில் அனைவருக்கும் அனுப்பப்பட்டது. அதில் பாலாஜி தான் தனி ஒருவனாக செய்தால் இரு ரூபாய் தான் முடியும் ஆகவே அவருடைய நண்பர்கள் (JBU - Unit) அனைவரையும் உதவி நாடினார். இவரின் மனித தன்மைக்கு கிடைத்த மரியாதை 16000/-. இவரின் இந்த முயற்சி உண்மையிலேயே பாராட்ட தக்கது. பாலாஜி என் நண்பன் ...சொல்லி கொள்வதில் கண்டிப்பாக எனக்கு (உங்களுக்கும்) சந்தோசம்....அன்பே சிவம் படம் பார்த்தால் மட்டும் போதுமா ? அவருடன் உதவிய அத்தனை நண்பர்களுக்கு என் நன்றிகள் சமர்ப்பணம்..(இதை என்னால் எழுத முடிந்ததே தவிர பணம் அனுப்ப இயலவில்லை)
வாழ்க மனித நேயம்...
Thursday, July 03, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment