இந்திய மக்களுக்கு எதிர் கால தலை முறைக்கு இந்த கவிதை சமர்ப்பணம்..
இதை எழுத ஊக்கப்படுத்திய எனது நண்பர்களுக்கு மிக்க நன்றி..
தாய் திருநாடு
பாரதம்!
தன்னிகரில்லா
தாயகம்..
வேதங்கள் தோன்றிய
வையகம்...
வேள்விகள் நிறைந்த
பாரதம்....!
மூவர்ண கொடிகளை
ஏந்தும் ....
மும்மத மக்களும்
ஒன்றினைந்திருபோம்
சமயங்கள் பலவான
போதும்
சமத்துவம் தானிங்கு
உயிர் மூச்சென்றேன்போம்
பள்ளியில் கல்விகள்
செய்வோம்...
பயிற்சியில் ஆழமாய்
சிந்தனை கொள்வோம்..
பிரிவினை கல்லறை
செய்வோம்
பிரிந்தவர் கூடியே
உலகம் சமைப்போம்
நீயிங்கு நானிங்கு
வேறா?
நாம் பிறந்த நாட்டின்
வேராய் முழங்கு...
சாதிகள் இனி நமக்கு
வேண்டாம்...
சமுத்திரம் போலவே
மனதை ஆக்கு
நிறங்கள் பலவான
போதும்
நிறைவான மனிதம்
பலமாக சமைப்போம்
பாரதம் பாரதம்............
என முழங்குவீரே
பாங்குடன் உலகினிக்கு
உன்னை வழங்குவீரே
இந்தியா இந்தியா
என சொல்லி பாரீர்
இதயத்தில் ரத்தங்கள்
ஒரு முறுக்கேறும்
மனிதனுள் மனிதம்
பாரீர்
மதத்தினை கொஞ்சம்
மறைத்தே வைத்து
ராமனும் கிருஷ்ணனும்
வருவான்
இயேசு அல்லா
தோழமை கொள்ள
இயற்கைகள் எல்லார்க்கும்
பொதுவாம்
செயற்கை சாயமாய்
மத வாதம் எதற்கு?
கடவுளர் எல்லார்க்கும்
பொதுவாம்
கயமை கலைந்தே
களித்திருப்போமே
தீவிர வாதங்கள்
செய்வோம்
தீமை அகற்றிட
வழி கண்டறிவோம்
உனக்குள்ளே ஒரு
மாற்றம் கண்டேன்
உன்னை மாற்ற
எனக்கு ஒருநொடி போதும்
கோடிகள் கோடிகள்
இந்திய மக்கள்
சிறு கோடுகள்
நம்மை பிரித்திடலமா?
யோசனை செய்திங்கு
பார்த்தால்
உன் வீடு என் வீடு
ஒரு வாசல் ஆகும்
நேசத்தில் திருக்கரங்கள்
பற்றி
தேசத்தின் பெருமை
உலகறிய செய்வோம்
சாதிகள் மதங்கள்
பெயரென்ன கேட்டால்
இந்தியா என்றே
பெயர் சொல்லி பாரீர்......
பின் குறிப்பு:
நீண்ட இடைவெளிக்கு பிறகு எழுத்துகிறேன்
தவறு இருந்தால் மன்னிக்கவும்
இரண்டு வாழை பழம் பிஸ்கட் பசி ஆற்றியது
மிக்க நன்றி படிததமைக்கு
ஷ்யாம் சுந்தர்
Friday, October 03, 2008
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment