சம்பளம் நிறைய சொன்னார்கள் .... அள்ளினேன்.. அள்ளினேன்.. சந்தோசம் மறந்து..
நிம்மதி என்று வெள்ளை தாளில் எழுதி விட்டு தூங்கி விட்டேன்
உறக்கத்தில் கூட களைந்து போனது உறக்கமின்றி கலைத்து போனது
உறவுகள் தூரத்து அலைபேசி உணர்வுகள் மரத்து போய் ஜடங்கள் நாங்கள்.
சம்பாதிக்கும் வழிகள் நிறைய உண்டு... நான் சம்பாதித்த வலிகள் நிறைய
பணம் தான் வாழ்கை பகட்டு ஒரு கேலி கூத்து ஒரு நாள் முடியும் என் தருணம்
வரும் வரை காத்திரு பொறு மனமே இனிமேல் வேண்டாம் கணி பொறியே..
எல்லை இல்லா ஆனந்தம் இருக்கின்ற அலுவலக அரசாங்கம்
தருகின்ற சம்பளம் போதும் என்றால் தரணியில் மகிழ்ச்சிக்கு குறைவே இல்லை
எனது வாழ்க்கை போராட்டம் என்னுடனே முடியட்டும்
இது உங்களுக்கு நான் சொல்லும் பாடம் அல்ல.. வேதனை இல்லாமல் வாழ வழி.
No comments:
Post a Comment