Saturday, February 28, 2009

சிவா மனசுல சக்தி..சீட்டுக்கு அடியில கத்தி..

அருமையான படம் என்று ஆனந்த விகடன் முதல் அடுத்த தெரு பையன் வரை சொன்னதை கேட்டு ஆட்டோ 130 பணம் கொடுத்து போனால் திரை முழுதும் ஜீவா மற்றும் பெயர் தெரியாத நாயகி மட்டும்.. கதை ஒரு வரியில் சொல்லலாம்..ஆனால் அதை மூன்று மணி நேரம் சொல்வது என்பது மிக சிரமமமான வேலை. நாயகன் நாயகி குறும்புத்தனங்கள் சில இடங்கள் பலே..சில இடங்கள் poor. சந்தானம் புலம்புற மாதிரியே படம் பார்க்கும் நாமும். அது என்னடா ஜீவா கல்யாணத்துக்கு முன்னாடி முதலிரவு வேணும் கேட்கிறது எல்லாம்..அட சீ. இதெல்லாம் ஒரு படம் என்று நினைக்க வைக்கும். நீங்களும் உங்களை கல்லூரி மாணவனாக நினைத்து படம் பார்க்க வேண்டும். இல்லையேல் உங்களுக்கு பல இடங்கள் சறுக்கலாக இருக்கும். என்னை போன்ற இளிச்சவாயர்கள் இருக்கும் வரை இந்த மாதிரி படங்கள் நன்றாக போகும் என்று நினைக்கிறேன். திரை முழுதும் ஜீவா, நாயகி, தங்கை, ஊர்வசி மற்றும் இன்னும் நான்கு முதல் ஆறு பேர் மட்டும் வந்து போகிறார்கள். ஒரு சில இடங்கள் குறிப்பாக தாயிடம் மன்னிப்பு கேட்கும் ஜீவா, மற்றும் நாயகி பற்றி ஜீவா ஆர்யாவிடம் சொல்லும் கட்டம் இவை எல்லாம் கொஞ்சம் ரசிக்கலாம். பாட்டு கேட்க ரொம்ப சுமார். ஆகா, சிவா மனசுல சக்தி, சீட்டுக்கு அடியில கத்தி.

No comments: