Thursday, February 11, 2010

கிழவியின் சிரிப்பு

நாட்கள் முடிந்து
     மாதம் பிரசவமானது

சந்தோஷ முகவரிகள்
     சம்பளம் பாக்கெட் உள்ளே

வரிகள் போக
     நின்றவை ஐம்பது

வடபழனி முருகன்
     என்னை வா வென்றான்

வரும் வழியில்
    சரவணா பவன்

கும்பிட்டு கொட்டி
     கொள்வோம் என்று
குரு திடல் அருகே
      காலணி விட்டேன்

கண்கள் அற்ற
      மூதாட்டி ....
கைதட்டி பிட்சை கேட்டாள்..

உண்டியல் இடுவைதிவிட
      உணவாக கொடுப்போம் என்று
உறுதி மொழி கொண்டேன்

முதல் மாத தவணைக்கு
     பசிக்கு ஒரு பன் பாக்கெட்..

"நல்ல இரு ராசா "...
     கிழவியின் ஆசீர்வாதம்..

மறுமுறை வந்தது
    இட்லி மூன்று
    வடை ஒன்று...

"என்ன ராசா மாதிப்புட்ட"...
"ஆஹா இது இட்லி"..

தொட்டு உணர்ந்தவள்
     கை தட்டி சிரித்தாள்

எனது கை குட்டை
        சற்றே நனைந்த்தது

"டேனியல்....எங்க போய்ட்ட"...

குரலுக்கு வந்தது
      குழைந்த வாலுடன் ஒரு நாய் (குட்டி)

அன்று இரவு நான் பட்னி
       ஆனால் மனசு நிறைவோடு..


ஷ்யாம சுந்தர்

No comments: