காணாமற் போன
தமிழ் கவிதை
காரணம் தேடாமல்
போனால் ........
முன்னர் எழுதிய
பேனா முனைக்களுக்கு
முக்கால் வாசி
காதல் மயக்கம்...
பசிக்கும் போதும்
இயற்கை ரசிக்கும்போதும்
ருசிக்கும் எந்தன்
பேனா முனை..
நிடங்கள் உறங்குவதற்குள்
வரிகள் பிரசவம்...
நொடிகள் பொடியாக
வார்த்தையோ நெடிகள்...
எதுகையும் மோனையும்
என்னோடும் பிறந்தது போல்
இணைந்து இருந்தன
எனக்குள்ளே...இப்போது...?
காலத்தின் ஓட்டங்கள்
எனக்குள் ஒட்டடைகள்
மாறுபாடுகள் வேறுபாடுகள்
என்னோடு படாதபாடுகள்...
Thursday, February 11, 2010
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment