Sunday, May 30, 2010

தனிமை எவ்வளவு கொடுமை?

கடந்த பதினெட்டு மாதங்களாக பெங்களூர் மற்றும் கோயம்புத்தூர் என்று வார விடுமுறை நாட்கள் போயின. இந்த வாரம் சென்னை மட்டுமே என்று முடிவாகியது. எப்படி பொழுது செலவிடுவது என்று ஒரே கவலை. 


படம் அல்லது பீச் போகலாம் என்றால் துணை இல்லாமல் (நண்பர்கள்) செல்வது மிகவும் கடினம். ஒரே ஒரு போன்..."சரவணா! உன்னை பார்த்து ரொம்ப நாள் ஆச்சு? பார்க்கலாம?"...நண்பனும் அவனது தனிமைக்கு துணை தேட...ஜோடி சேர்ந்தது...ஆஹா? காலையில் பாலாஜி வீடு...கோயில் அப்புறம் அவங்க வீடு தோசை என...சனி கிழமை..சாயங்காலம் வரை தள்ளிட்டோம்...


மனைவிக்கு ரெண்டு மறை போன் போட்டிருந்தால் பெரிய விஷயம்..கடந்த கால வாழ்கை பற்றி முழுதும் அசை போட்டு முடித்த போது கொஞ்சம் கனமாக இருந்தது....நான், பெங்களூர....முத்து, பாலாஜி, பதி, இன்னும் பலர் என் கண் முன்னே வந்து போயினர்,


ஒரு விஷயம் தள்ளி இருந்து பார்க்கும்போது தான்...அதனுடைய முழு பிம்பம் நமக்கு கிடைகிறது..அப்படி தான் கடந்து போன வாழ்கையும்...அதை அசை போட எத்தனை பேருக்கு நேரம் இருக்கும்..எனக்கு தெரிய வில்லை...கம்ப்யூட்டர், வேலை, வீடு, மளிகை சாமான், மாத செலவு, கடன் பட்டுவாடா...வருங்கால பய உணர்வுகள்...இவை அனைத்தையும் மீறி உங்களுக்கு நேரம் கிடைத்தால்..ஆஹா...நீங்க கொடுத்து வச்சவங்க....


இப்படி நினைச்சு பேசி ராத்திரி தூங்கிட்டேன்..மறு நாள், சண்டே...முழித்து பார்த்தால் மணி ஏழு....மறுபடி எனது இயல்பு வாழ்கை எட்டி பர்ர்க்க, முடி வெட்டி, வீட்டை சுத்தம் செய்து, சோற்றுக்கு எனது பெரியம்மா வீட்டில் பிட்சை எடுத்து...இதெல்லாம் ஒரு வாழ்கையா என்ற முடிவுக்கு வந்து கோவத்தில் கண்ணை மூட, மணி 12.30 பகல்..ஒரு நாளைக்கு 5 மணி நேரம் மட்டுமே தூங்கும் எனக்குள், பகல் நேரத்தில் 5 மணி வரை செம தூக்கம்..


பகல்ல தூங்கிட்டேன் ராத்திரி என்னடா பண்றது...கொய்யால...முடிய பிச்சுகிட்டு திரிய வேண்டியது தான்கிற நிலைமியில...YOUTUBE பக்கம் போனேன். கொஞ்ச நேரம் Business, funny advertisements, அப்புறம் Music-ன்னு நேர நம்ம ஏரியா பக்கம் வந்துட்டேன்.


Link: http://www.youtube.com/watch?v=2ZBjyIZE9ug 


கணேஷ் குமரேஷ் அவர்களின் இசையில் கிட்டதட்ட 3 மணி நேரம்...ஒரு போன் பண்ணல... இதுல என்ன சங்கதி?  மேலே இருக்கும் பாட்டை நீங்கள் கண்ணை மூடி கொண்டு கேட்டு பாருங்கள்...கண்டிப்பாக உங்களுக்கு பிடித்தமானதாக இருக்கும். மேலும், எனது வீட்டின் குளிர் [ :) ] தாங்காமல் வெளியே இன்டர்நெட் மற்றும் லேப்டாப் ஆகியவற்றை கொண்டு வந்து வெட்ட 
வெளியில் காற்றோடு, இந்த இசையில் மற்றும் நான் தொலைந்து போனேன்.நமக்குள் எதோ ஒன்று மோதி விட்டு போகிறது. தனிமை இசை ஒரு நல்ல நண்பன் தான் போல. எனக்குள் நான் சற்றே சிரிக்க முடிகிறது. இதை எல்லாம் கேட்டு முடித்து உறங்கும் போது மணி 12-க்கு மேல் ஆகி விட்டது.






நளின காந்தி:


http://www.youtube.com/watch?v=DtOFHP3RI4w&feature=related

http://www.youtube.com/watch?v=b-3xKWt3qMo&feature=related

http://www.youtube.com/watch?v=HiVOotxLKjs&feature=related

More details on Raga:
http://www.youtube.com/watch?v=B2l3MILsQKc&feature=related

enjoy this :
http://www.youtube.com/watch?v=t3bW9P5Z6sI&feature=related

http://www.youtube.com/watch?v=od2KmHbFEFA&feature=related

http://www.youtube.com/watch?v=od2KmHbFEFA&feature=related

ஷ்யாம் சுந்தர்



1 comment:

Anonymous said...

//தனிமை இசை ஒரு நல்ல நண்பன் தான் போல. //

தனிமை என்பது வரமா ? சாபமா ?? என்பது சென்னையில் பைக் ஓட்டுவது விபத்தாகும ? ஆகாதா ?? என்பது போல... முடிவில்லாத தற்கதுக்குரியது. ஒருவரின் தன்மை, தெளிவு, விருப்பம், ஆர்வம் போன்றவற்றை உள் அடக்கியது அது. தனிமையை சரியான முறையில் அணுக சரியான பயிற்சி வேண்டும். இசைக்கு தேவை படுவது போல...