Sunday, January 15, 2012

நண்பன் - ஆல் இஸ் வெல்


நீண்ட இடைவெளிக்கு பிறகு நான் எழுதலாம் என்று நினைத்து வந்து இருக்கிறேன்.


முன்னாடி மாதிரி கொஞ்சம் முடியலை. வயசாகி போச்சு..சரி விடுங்க..


எங்கேயும் எப்போதும் பார்த்து எழுதலாம் என்று நினைத்தேன். ப்ராஜெக்ட் கொஞ்சம் டைட். நேரம் கிடைக்கல. சரி நேர மேட்டர்-க்கு வரலாம்,


இந்தி படம் 3 இடியட் படம் பார்த்தவங்க தன்னோட சொந்த மொழியில் சந்தோஷ பட நண்பன் ஒரு வகையில் சந்தோசம் தான். என்னோட மனைவி 3-இடியட் பார்த்து சிரிக்கும் போது எனக்கு கொஞ்சம் புரியலை. ஆனா அவங்க சிரிச்ச அதே சீன்ல என்னால சிரிக்க முடிஞ்சது. அதனால சங்கருக்கு நன்றி சொல்லணும்.


வெற்றிக்கு பின்னால போகாத...திறமை வளர்த்துக்கோ..வெற்றி உன் பின்னால வரும்..
மேல சொன்ன தத்துவத்துக்கு உருவம் கொடுத்திருக்கார் டைரக்டர். ஸ்ரீகாந்த், ஜீவா, சத்யன் அப்புறம் விஜய், சத்யராஜ் ஆகியோரின் நல்ல உழைப்பில் நண்பன் நன்றாகவே இருக்கிறான்.


சிவா பிரகாசத்தின் மகனாய், பன்னீர் போல நிறைய மாணவர்கள் நிதர்சனத்தை சுட்டி காட்டி இருக்கிறார்கள். கல்லூரி வாழ்க்கையில் தூக்கி எறிந்த நிறைய மாணவர்கள் சாதனை பட்டியலில் தான் இருக்கிறார்கள். 



எந்தன் கண் முன்னே
கண் முன்னே
காணாமல் போனேனே!

யாரும் பார்க்காத
ஒரு விண்மீனாய்
வீணாய் நான் ஆனேனே!

இதயம் கிழியும் ஒலி கேட்டேன்
இதையா இதையா எதிர்பார்த்தேன்?
மழை கேட்கிறேன்
எனை எரிக்கிறாய்
ஒளி கேட்கிறேன்
விழிகளை பறிக்கிறாய்

கனவை கனவை கலைத்தாயே
தொடர்ந்திட விடுவாயா?
வலிகள் வலிகள் கொடுத்தாயே
நான் உறங்கிட விடுவாயா?


வெறும் சத்தத்துக்குள் மட்டும் இல்லாமல் சந்தத்தின் வரிகளுக்குள் விழவைக்கிறார். மதன் கார்கி அவர்களுக்கும் அதை உயிர்ப்புடன் பாடிய ராஜு கண்டிப்பாக கவனிக்க படவேண்டியவர்கள். 

விஜய் படம் என்று பார்க்க போனால் கண்டிப்பாக ஏமாற்றம் தான் கிடைக்கும். அவரை ஒரு நல்ல பாசிடிவ் இளைஞனாக நல்ல நண்பனாக செதுக்கி இருக்கிறார்கள். ஜீவா, ஸ்ரீகாந்த் மற்றும் சத்யன் நல்ல கூட்டு முயற்சி. 


சத்யராஜ் சொல்ல வேண்டாம், 5 நிமிஷம் வந்தாலே மனசுல நிப்பாரு..நல்லா இருக்காரு ஆனா எதோ ஒன்னு குறையுது. ஒருவேளை ஓவரா நடிச்சிட்டாரோ? 


ஒரு சில காட்சிகள் சினிமாதனம் தெரிஞ்சாலும், சொல்ல வந்த செய்திகளை ஒன்னு ஒன்னாக அவிழ்த்து விடுகிறார். செமஸ்டர் பயப்படும் ஜீவா, தூக்கு மட்டும் பன்னீர், மில்லி மீட்டர் சென்டி மீட்டர் வளர்த்தது எல்லாம் நல்ல டைரக்டர் கை வண்ணம்.




நீண்ட இடைவெளிக்கு பிறகு நல்ல படம் பார்த்த திருப்தி எனக்கு. என்னடா கதை பத்தி பேசவே இல்ல நினைக்காதீங்க..ஆல் இஸ் வெல். போய் படம் பாருங்க. நான் இந்தியில படம் பார்க்கல. நல்ல ரசிக்க முடிஞ்சது. ஒரு வேலை பார்த்து இருந்தா நான் ஒப்பீடு செஞ்சு பார்த்திருப்பேனோ என்னவோ? 


நான் ரசித்தது உங்களுக்காக..நீங்களும் ஒரு முறை இசைத்து பாருங்கள்.








சமீபத்தில் எனது ப்ராஜெக்ட் வந்து சேர்த்த இளம் புயல்களுக்கு(அது தான் பாஸ் freshers) இந்த படத்தில் உள்ள கருத்தை தான் சொல்லி இருக்கிறேன். கண்டிப்பாக படம் பார்த்தால் அவர்களுக்கு கண்டிப்பா புரியும். 


மேட்டர் ஒன்னு தான் மாமே...எனக்கு சொல்லி கொடுத்தது அனுபவம். இப்போ சொல்றது பாரி @ பசபுகழ் விஜய். 


அனைவருக்கும் எனது பொங்கல் நல் வாழ்த்துக்கள். 


Note: அடுத்த வாரம் நாங்க டீம் கூட போறோம்.


என்றும் அன்புடன் 
ஷ்யாம் சுந்தர்

No comments: