எனது கவிதையை படித்த / ரசித்த அனைத்து உள்ளங்களுக்கும் நன்றி.
நான் ஒரு பினிக்ஸ் பறவை போல உணருகிறேன்.
நான் நல்ல கவிஞன் அல்ல..
படைப்பாளியும் அல்ல..
நிகழ்வுகளை மட்டுமே நான்
படம் பிடிக்கிறேன்..
சில சந்தர்பங்களை
நான் அசை போடுகிறேன்..
சில வார்த்தைகளை மட்டுமே
பூவாய் கோர்க்கிறேன்...
அதனை உள்வாங்கி
நீங்கள் ஏற்கிறீர்கள் என்றால்
நீங்களும் ஒரு கவிஞன் ஆகிறீர்கள்..
நான் எழுத நீங்கள் ஒரு தூண்டுகோல்..
என்னுள் பற்றி எரிகின்ற
தமிழ் நெருப்புக்கு
நீங்களே திரி நூல்...
ஒரு படைப்பாளிக்கு
நல்ல ரசிகர்கள் தேவை...
இந்த கிறுக்களுக்குள்
கிளுகிளுப்புக்கள் இல்லை...
உங்கள் கைதட்டுக்காய்
என் கவிதை இல்லை
அனைத்தும் எனது
உள்ளக் கிடக்கை..
நான் மேலும் எழுத வழி செய்யுங்கள்...
தவறை சுட்டி காட்டுங்கள்...
அனைவருக்கும் நன்றி..
தமிழ் ஒரு இனிமையான மொழி...
அதை உணர்ந்து படிக்கும்
நாங்கள் அருமையானவர்கள்..
நன்றியுடன்
ஷ்யாம் சுந்தர்
No comments:
Post a Comment