உன் மீது நம்பிக்கை வை.
துணையில்லை யாரும் உனக்கு..
அணை புரட்டும் வெள்ளமடா நீ...
அகந்தை அழித்தே நீ...
அகிலம் நீ கொளடா..
வீழ்ந்து விடுவான் என
வேடிக்கை பார்க்கின்றான்..
தாழ்ந்து விடுவான் என்றே
தாயத்தை உருட்டுகிறான்..
வேர்களை வெட்டிவிட்டு
மரம் வளர நினைக்கிறது..
மண்ணிடம் கிளைகள்
மண்டியிட்டு நிற்கிறது..
காலல்ல இது கையென்று
கதறியவன் - இன்று
கை உதறி தள்ளிவிட்டு
கை கட்டி நிற்கிறான்..
உன் சுவாசத்தை
விசுவாசமாக்கதே..
மறதி இந்த மனிதனின்
கிளை நோய்..
சூழ்சிகளுக்குள் அறிவு
நோய்வாய்பட்டு போகிறது...
பலமே பலவீனமாக
தனிமை படுத்தபடுகிறாய்..
உதவி செய்வதாய் நினைந்து
உன்னை கடன் கொடுக்காதே..
உன் ஆற்றல் நீயே அறி..
நீ தற்குறி அல்ல...
நம்பிக்கையின் முதற்குறி...
முட்டாள் முதலாளிகளுக்கு
முலாம் பூசுவதை நிறுத்திக்கொள்..
உன் மீது நம்பிக்கை வை.
துணையில்லை யாரும் உனக்கு..
இது உங்கள் சூழ்நிலைக்கு பொருத்தமானதாக இருந்தால்
நான் பொறுப்பல்ல. இது எந்த உள்நோக்கத்தோடும் எழுதப்படவில்லை.
உங்களை காயபடுத்தி இருந்தால் கவிதை பொறுப்பல்ல. நீங்களே...!
ஷ்யாம் சுந்தர்
துணையில்லை யாரும் உனக்கு..
அணை புரட்டும் வெள்ளமடா நீ...
அகந்தை அழித்தே நீ...
அகிலம் நீ கொளடா..
வீழ்ந்து விடுவான் என
வேடிக்கை பார்க்கின்றான்..
தாழ்ந்து விடுவான் என்றே
தாயத்தை உருட்டுகிறான்..
வேர்களை வெட்டிவிட்டு
மரம் வளர நினைக்கிறது..
மண்ணிடம் கிளைகள்
மண்டியிட்டு நிற்கிறது..
காலல்ல இது கையென்று
கதறியவன் - இன்று
கை உதறி தள்ளிவிட்டு
கை கட்டி நிற்கிறான்..
உன் சுவாசத்தை
விசுவாசமாக்கதே..
மறதி இந்த மனிதனின்
கிளை நோய்..
சூழ்சிகளுக்குள் அறிவு
நோய்வாய்பட்டு போகிறது...
பலமே பலவீனமாக
தனிமை படுத்தபடுகிறாய்..
உதவி செய்வதாய் நினைந்து
உன்னை கடன் கொடுக்காதே..
உன் ஆற்றல் நீயே அறி..
நீ தற்குறி அல்ல...
நம்பிக்கையின் முதற்குறி...
முட்டாள் முதலாளிகளுக்கு
முலாம் பூசுவதை நிறுத்திக்கொள்..
உன் மீது நம்பிக்கை வை.
துணையில்லை யாரும் உனக்கு..
இது உங்கள் சூழ்நிலைக்கு பொருத்தமானதாக இருந்தால்
நான் பொறுப்பல்ல. இது எந்த உள்நோக்கத்தோடும் எழுதப்படவில்லை.
உங்களை காயபடுத்தி இருந்தால் கவிதை பொறுப்பல்ல. நீங்களே...!
ஷ்யாம் சுந்தர்
No comments:
Post a Comment