பாரெங்கும் போற்றும்
திருநாடு
எது? இதா?
ஜாதி மத பேதங்கள்
இல்லாத திருநாடு
எது? இதா?
ஊரெங்கும் ஒற்றுமை
உலவும் திருநாடு
ஜெகமெங்கும் சத்தியம்
உலவும் திருநாடு
எது? இதா?
சத்திய சோதனை
கண்டதிருநாடு
நித்திரை சுதந்திரம்
அடைந்த திருநாடு
எது? இதா?
புத்தன், இயேசு, அல்லா
புவி வருகை தந்த திருநாடு
எது? இதா?
எம்மத மக்களும்
மகிழ்ச்சி கொண்டாடும்
எதிர்கால இந்தியா
எது? இதா?
பிரிவினை அற்ற
திருநாடு
பிறரையும் போற்றும்
திருநாடு
எது? இதா?
மழலைகள் மகிழும் திருநாடு
மலைமகள் அருளும் திருநாடு
எது? இதா?
தீவிரவாதமில்லா திருநாடு
தீரரை போற்றும் திருநாடு
எது? இதா?
வன்முறை அற்ற திருநாடு
வளமான இந்தியா திருநாடு
எது? இதா?
குண்டுகள் முழங்க திருநாடு
குதூகலம் தங்கிடும் திருநாடு
எது? இதா?
பஞ்சங்கள் அற்ற திருநாடு
பாவங்கள் அற்ற திருநாடு
எது? இதா?
எண்ணத்தில் தோன்றியவை வேகத்தில் வார்த்தைகள் ஆயின...திருநாட்டை குறை சொல்லவதேன் நோக்கமல்ல.. எதிர்பார்ப்பின் விளிம்பில் சக மனிதனின் உணர்வுகள் மட்டுமே இவை. உங்கள் கருத்துக்களுக்கு நன்றி.
இப்படிக்கு
மானுடன்
Tuesday, November 11, 2008
Subscribe to:
Post Comments (Atom)
1 comment:
Yentha prachaniyum illa naadu ivvulagil ullaththa?
Intha prachaniyellam theernthaalum, irukkavey irukku makkat thogai prachanai!! Enakku ennavo ivvalavukkum moolak karanam makkat thogai perukkam thaan yendru thondrukiraththu..
Post a Comment