Thursday, March 18, 2010
விண்ணை தான்டி வருவாயா?
எல்லா படங்களுக்கும் விமர்சனம் எழுதுவது என்பது கொஞ்சம் கடினமான வேலை தான். சில படங்களை பார்க்கும் போது நம்ம எதாவது எழுதியே ஆகனும்-கிற வெறி வருது. இது என்னால எழுத முடியும்கிற தலை கணத்திலே வர்றது இல்ல, நம் மனதுகுள் இருக்கும் ஒரு ஆதங்கம் இப்படி எழுத சொல்கிறது.
என்ன இந்த படதுல ஷ்பெஷல் அப்படின்னு பார்தா...படம் பார்க்கும் நபர் தன்னை கார்திக் அல்லது ஜெசியாக நினைத்து கொள்வது,ஓளி கற்றைக்கு நடுவே நம்மை நிஜ பிம்பமாக உலவ விட்டு இருக்கிறார் மேனன். அவர்கள் பேசும் வார்தைகள் கண்டிப்பாக நீங்கள்
பேசியதாக தான் இருக்கும். என்னை பொறு வரை இந்த படத்தை அசை போட்டு பாருங்கள்.
ஜெசி , அதாவது த்ரிஷா (இனிமேல் இவரை இப்படியே அழைக்கலாம்), நடிக்க சொன்னால் உங்கள் உதட்டு சிரிப்பு மற்றும் சுளிப்புகள் இயல்பாக வந்து போகிறது. இதை மட்டுமே நீங்கள் கூர்ந்து கவனித்தால் காதலி காதலனின் செயலுக்கு காட்டும் பதிலாக அமைகிறது.
இந்த படம் மற்ற படத்தை காட்டிலும் நங்கூரம் பாய்ச்சி உட்காருகிறது. (என் மனதிலும்). காரணம் காதல் என்பது ஒரு விதமான கற்றல். அதை படிக்க படிக்க மேலும் சுவை கூடும். படித்தவன் அனுபவித்து இருந்தால் கண்டிப்பாக அவனது உணர்சிகள் கூர் தீட்டப்பட்டு இருக்கும். கிரிக்கெட் மேட்ச் ஆடுபவனுக்கும் , ஒரு பார்வையாளனாக அதை ரசிப்பவனுக்கும் நிறைய வித்தியாசங்கள் உண்டு. (நான் ஒரு கிரிகெட் பிளேயர்.)(டிஸ்கி: இதை எனக்கு சொன்னவர் ராம் பிரசாத்). காதலில் நீங்கள் அனுபவித்து இருந்தால் படம் பார்க்கும் போது நிறைய இடங்கள் நெருடல் ஆக இருக்கும். ஏனெனில் நானும் நீங்களும் செய்யாத / புரியாத விஷயங்கள் அல்ல இந்த பிம்பங்களின் பிரதிபலிப்பு. காதலில் விழுந்து புரண்டு அனுபவிக்க முடியாத சிலர் கண்டிப்பாக "காதல் என்றால் இப்படி தானோ " என்ற நிலைமைக்கும், "நமக்கு அந்த வாய்ப்பு கிடைக்கலியே" என்ற மன நிலைக்கும் ஆட்பட்டு போகிற மனதிக்கு இந்த படம் ஒரு வடிகால்.
என்னை பொறுத்தவரை நான் ரசித்த பல கட்டங்கள் நானே தாண்டி போனவை தான். கண்டிப்பாக இந்த படம் பார்க்கும் பொழுது எனது பழைய / கடந்து வந்த பாதைகளையே நினைத்து இருந்தேன். ஏனெனில் நானும் ஒரு விதத்தில் கார்த்திக் தான். மின்னல் என ஓடி மறைந்த எனது கல்லூரி வாழ்க்கையை மறுபடி என்னை திரும்பி பார்க்க வைத்து இருக்கிறது. கண்டிப்பாக என்னோடு படித்தவராக இருந்தால் நிச்சயம் அவர் நினைவில் நான் வந்து தான் இருப்பேன். ஏனெனில் என்னுடைய ஜெசி உண்மையிலே ஜெசி தான். வேண்டாம் என்று சொல்லியும் துரத்தி தான்...அந்த கார்த்திக் போல.
இவர்களுடைய சம்பாஷனைகள் பல இடங்களில் இதமாக வருடி விட்டு போகும். திரை முழுதும் கார்த்திக் / ஜெசி வியாபித்து இருபதாக மட்டுமே கொள்ள முடிகிறது. வந்து போகும் ஒரு சிலரில் நண்பனாக வரும் நபர் நிஜம். எல்லோருடைய காதலில் இதை போன்ற மொக்கை நபர்கள் உண்டு என்றால் மறுக்க முடியாத நிஜம்.
நெக்குருகி காதலிப்பது நெஞ்சு முட்ட கண்ணீருடன் பிரிவது, சலித்து போன கூவ பட்டறையாக இருந்த இத்துறையில், உங்களை / உங்கள் காதலியை கண் முன்னே உலவ விட்டு இருக்கிறார் கௌதம் மேனன். உங்கள் சுய ரூபங்களை நிஜ பிம்பங்களாக வாழவிட்டு இருக்கிறார் என்று சொன்னால் மிகையாகாது(நன்றி கமல்).
ஒரு அரங்கமே நின்று கை தட்டும் அளவிற்கான மிகை இல்லாத நடிப்பு, த்ரிஷா / சிம்பு. கண்டிப்பாக இவர்கள் வாழ்க்கையில் இது ஒரு மைல் கல். அதுவும் கடைசி கிளைமாக்ஸ் காட்சியில் தனக்குள் வாழ்ந்து கொண்டிருக்கும் ஜெசி பற்றி கார்த்திக் கூறும் காட்சிகள் கண்டிப்பாக உங்கள் மனதில் ஒரு அலையை ஏற்படுத்தும். விரசங்களே இல்லாமல் ஒரு காதல் கதை, அவனோ / அவரோ / அவளோ இந்த படத்தை உள்வாங்கி கொண்டால் கண்டிப்பாக இந்த பிம்பங்களோடு அவர்கள் தன்னை பொருத்தி பார்த்து இருக்க வேண்டும்.
கார்த்திக் போல வாழ துடிக்கும் நிறைய சிம்புக்கள் இருப்பதால், த்ரிஷா போல மறுதலிக்கும் பெண்ணின கூட்டமும் இருப்பதால் கண்டிப்பாக இந்திய மண்ணை தாண்டி ஓடும். காதலின் அப்பியாச பாடங்கள் இந்த படத்தில் இல்லை, மாறாக பெண்ணின் பரிமாணங்களை கௌதம் மேனன் / த்ரிஷா கூட்டணி வெளுத்து வாங்கி இருக்கிறார்கள்.
நீங்கள் ரசித்தவற்றை பட்டியல் இட சொன்னால் கண்டிப்பா "ஓமன பெண்ணே" பாடல் அதில் இடம் பெரும், மேலும் கேமரா அதிலும் வெண்மை பிரதிபலிக்கும் காட்சிகள் - பேச வைக்க நிறைய காட்சிக்க உண்டு.
படம் முடிந்து எனது மனைவி கேட்டல் " நீ என்ன என்னை கார்த்திக் மாதிரி லவ் பண்ணல?" இந்த கேள்விக்கு எனக்கு மட்டும் தான் பதில் தெரியும். நான் ஒன்னாவது வகுப்பு இரண்டாவது முறை எழுதுவது யாருக்கு தெரியும்?
நன்றி கௌதம். உங்கள் ஜெசி கண்டிப்பாக மற்றவர் இதயம் தொடுவாள்.
இதோடு நான் மூன்றாவது முறை செல்ல எத்தனிக்கிறேன். நான் இன்னும் கார்த்திக்காக வாழ்கிறேன், எனது மனைவியோடு. ஏனெனில் இவள் எனது ஜெசி, விண்ணை தாண்டி....
இப்படிக்கு
ஷ்யாம் சுந்தர் @ கார்த்திக் (படம் முழுக்க நான் தான் இருக்கேன்)
குறிப்பு: இந்த படம் பார்ப்பவர் தயவு செய்து காதலை பார்க்காதீர், காதலித்து பாருங்கள்.
Subscribe to:
Post Comments (Atom)


5 comments:
you are welcome to comment on this post
he.. hee...
he.. he...
Sath Sith Aanandam.
Ithu oru Kadal Sathi.... Athuvum kilavi Thirisha..
Ithu konjam overa theriyala? 1st Std. 2nd Time.....
Wren and Martin : Precise writting in two words. " Archaeology of LOV"
(E purposefully removed )
E has been added multiple times by Anonymous
Post a Comment